தலைவலிகள் அனைத்தும் மூளை கட்டியால் ஏற்படக்கூடியதா ?
Posted On 17/12/2021
0
6.3K Views
தலைவலிகள் அனைத்தும் மூளை கட்டியால் ஏற்படக்கூடியதா ?
பொதுவாக நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் வரும், தலைவலி மூளை கட்டியால் ஏற்படக்கூடியதா ? என்பதுதான். அடிக்கடி தலைவலி வந்தால் , உடனே இதுபற்றி இணைய தளங்களில் தேடிப்பார்போம் . பல சமயங்களில் நமக்கு கிடைக்கும் பதில்கள் தலைவலி வந்தால் அது Brain Tumor ஆக இருக்கும் என்பது தான் . இதனை கண்டதும் பலருக்கும் ஒரு வித பயம் ஏற்படும் . Brain Tumor நமக்கு இருக்குமோ ? அதனால் தான் தலைவலிக்கிறதோ என்ற என்ணம் வரும் . தலைவலி என்பது சாதாரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினை .
இன்றைய இன்டர்நெட் யுகத்தில் , நமக்கு உடலில் ஏதாவது சின்ன பிரச்சினை வந்தால் கூட அதனை இன்டர்நெட்டில் தேடிப்பார்ப்பது என்பது வாடிக்கையாகி விட்டது . இதனால் பலரும் தனக்கு Brain Tumor இருக்குமே , தலையில் ஏதும் கட்டி இருக்குமோ என்ற சந்தேகத்தில் தன்னைத்தானே குழப்பிக்கொள்கிறர்கள் . அதுவும் ஐடியில் பணிபுரியும் மக்களிடம் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது .
Brain Tumor என்றால் தமிழில் மூளைக்கட்டி என்று பெயர் . இந்த மூளைக்கட்டி என்பது சாதாரணமாக இல்லாமல் அசாதரணமாக மூளையில் ஏற்படும் செல் வளர்ச்சி. அதாவது மூளையில் உள்ள செல் சதாரணமாக இருக்கும் அளவை விட அசதரணமாக வளர்வது . இவ்வாறு அசாதரணமான அளவில் செல்களின் வளர்ச்சி ஏற்படும்போது , மூளையின் நடுப்பகுதியின் உள்பகுதிபிலோ அல்லது வெளிப்பகுதிலியோ இதுகட்டியாக வளரத் துவங்கும் .
அதுபோல வளரத் துவங்கும்போது அது எந்த இடத்தில் இருக்கின்றதோ அந்த இடத்தில் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சிலருக்கு முன்பக்க மூளையில் கட்டி இருக்கும் என்றால் அது கை கால்களின் பலத்தை பாதிக்கும். நடுப்பகுதியில் இருக்குமெனில் அது உணர்ச்சியை பாதிக்கும்.
வலதுபுற மூளை உடலின் இடதுபுற செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.இடதுபுற மூளை உடலின் வலதுபுற செயல்பாட்டை கட்டுப்படுத்தும். அதனால் வலதுபுற மூளையின் முன்பகுதியில் கட்டி இருந்தால், உடலின் இடதுபுற கை கால் செயலிழக்கும். அதுபோல மூளையின் பேச்சுப்பகுதி Frontal lobe and temporal lobe என்ற பகுதியில் இருக்கின்றது. அந்த இடங்களில் கட்டி உருவானால் அது பேச்சுத்திறனை பாதிக்கின்றது.
மூளையின் வெளிப்புறப்பகுதியில் இதுபோன்ற கட்டிகள் ஏற்படும்போது, அது உடலில் வலிப்பு நோயை உருவாக்கும். மூளையில் இந்த கட்டியின் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டிருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அழுத்தம் அதிகமாகும் போது தான் தலைவலி உருவாகும்.
மனித மூளை என்பது ஒரு உணர்ச்சியற்ற பகுதி, அதாவது வலி உணர்ச்சியற்ற பகுதி. மூளையைச் சுற்றியுள்ள சவ்வு மட்டுமே வலியை உருவாக்கக்கூடிய பகுதி. மூளையில் கட்டி உருவாகி அது சவ்வு பகுதியை தொடும்போது தான் தலைவலி உருவாகத்தொடங்கும்.
மூளைக்கட்டிகள் வளர வளர, மூளைப்பகுதியில் அழுத்தம் அதிகமாகும். இதுபோல கட்டிகளினால் அழுத்தம் கூடும்போது, அந்த அழுத்தம் கண் நரம்புகளின் மீது பரவ ஆரம்பிக்கும். அதனால் கண்பார்வை பாதிக்கப்படும்.
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி வரத்துவங்கும். வாந்தியை ஏற்படுத்தக்கூடிய பகுதி மூளையின் பின் பகுதியில் உள்ளது. அந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் வாந்தி வரலாம் அல்லது மூளையின் அழுத்தம் கூடுவதால் கூட வாந்தி வரலாம்.
மூளைக்கட்டி என்பது சிக்கலான பிரச்சினை என்றாலும் ,அது எல்லாருக்கும் வரக்கூடியது அல்ல. மூளைக்கட்டி உருவாக தெளிவான காரணங்கள் இல்லையென்றாலும் பொதுவாக இது மரபணு சம்பத்தப்பட்டதாக இருக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
எல்லாருக்கும் இருக்கக்கூடிய சந்தேகம், எனக்கு அடிக்கடி தலைவலி வருக்கிறது , அது மூளைக்கட்டியாக இருக்குமோ என்பது தான். அப்படி அது மூளைக்கட்டியாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் சாதாரண தலைவலி எல்லாருக்கும் வரும். மூளைக்கட்டியால் வரும் தலைவலி என்பது அசாரணமானதாக இருக்கும்.
ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வந்துகொண்டிருந்தால் , சுய மருத்துவம் செய்யாமல், அருகில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சென்று அந்த தலைவலி எதனால் வருகிறது என்று கண்டறிய வேண்டும். தேவைப்பட்டால் நரம்பியல் மருத்துவர் ஆலோசனையின்படி Scan, MRI போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. எப்போதுமே, நம் உடலில் ஒரு பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டால் அதனை சாதாரணமாக விடாமல், மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பின்பற்றவேண்டும்.
இன்டர்நெட்டில் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறிப்பிட்டு தேடும்போது கிடைக்கும் தகவல்களை படித்தால் தேவையற்ற பயமும் மனக்குழப்பம் மட்டும் ஏற்படும். உடலில் பாதிப்பு இருந்தால் உடனே அது தொடர்பான மருத்துவர்களை அணுகி விரைவில் சிகிச்சை பெறுவதே நல்லது.
- Advertisement -