வலிப்புத்தாக்கங்கள் என்றால் என்ன ? அல்லது எபிலெப்ஸி என்றால் என்ன ? Epilepsy
வலிப்புத்தாக்கங்கள் என்றால் என்ன ? அல்லது எபிலெப்ஸி (Epilepsy) என்றால் என்ன ?
மூளை செல்கள் மற்ற செல்களுடன் தகவல்களை பரிமாறுவதற்காக சிறிய அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சில காரணங்களால் அல்லது காரணம் இல்லாமல் இந்த மின்சாரம் அதிகமாக உற்பத்தி ஆகி அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்கு செல்லும்போது, உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் திடீரென கட்டுப்பாடு இல்லாமல் சிலருக்கு வலிப்பு வரக்கூடும்.
வலிப்பு ( suits / seizures / convulsions ) என்பது அறிகுறி மட்டுமே. ஒன்றுக்கு மேல் வலிப்பு வந்தால் அதை வலிப்புத்தங்கள் அல்லது எபிலெப்ஸி (Epilepsy) என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் 10 மில்லியனுக்கும் மேலான மக்கள் இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.அதில் 70% பேர் சரியான மருத்துவ சிகிச்சை மூலமாக குணமடைந்து சராசரி வாழ்க்கையே வாழுகிறார்கள்.
வலிப்புத்தாக்கள் வருவதற்காரணகள் என்னென்ன ?
வலிப்பு முக்கியமாக சிறிய வயது உடையவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் வர வாய்ப்பு உண்டு.இதில் ஆண்கள் அதிகமாக பாதிப்பு அடைகிறார்கள்.
வலிப்புத்தாக்கள் வருவதின் காரணங்கள் :
● தலை அடிபட்டு ஏற்படும் காயம்
● படிக்கவாதம்
● கல்லீரல் செயலிழப்பு
● கிட்னி செயலிழப்பு
● அல்சைமர்ஸ் நோய்
● தூக்கம் இல்லாமை
● மன அழுத்தம்
● மருந்துகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது.
வலிப்புத்தகங்கள் பற்றி தவறான புரிதல்
● # வலிப்பு நோய் உள்ளவர்கள் ஊனமுள்ளரவர்கள், அவர்களால் வேலைகளை சரியாக செய்ய முடியாது.
விளக்கம் : வலிப்பு நோய் உள்ளவர்கள் சக மனிதர்களுக்கு ஈடானவர்கள் தான், வலிப்பு நோய் உள்ள பலர் வணிகம், கலை, அரசு வேலைகள் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.
● # சாவிக்கொத்து அல்லது இரும்பு கையில் கொடுப்பது வலிப்புத்தாக்களை தடுக்கும்
விளக்கம் : வலிப்பு நோய் பெரும்பாலும் 90% நபர்களுக்கு இரண்டு நிமிடத்தில் நின்றுவிடும். சாவிக்கொத்து கையில் கொடுப்பது எந்த நிலையிலும் உதவாது.
● # வலிப்பு நோய் உள்ளவர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
விளக்கம் : ரத்தத்தில் சமநிலையற்ற எலெக்ட்ரோலைட்ஸ் அல்லது சர்க்கரை அளவு குறைவது போன்ற பல காரணங்களால் இந்த வலிப்பு நோய் வரலாம். அதை பலர் மனநோய் என தவறாக புரிந்துகொள்கிறார்கள்
வலிப்புத்தாக்கங்கள் அறிகுறிகள் என்ன ?
● உடல் விரைப்பாகுவது
● நாக்கு கடிப்பது
● வாயில் நுரைதள்ளுவது
● உடல் நடுக்கம்
● சுயநினைவு இல்லாமல் இருப்பது
● சிறுநீர்ப்பை மற்றும் உடல் கட்டுப்பாடு இழப்பது
ஒவ்வொரு வலிப்பு நோய் வகையும் வெவ்வேறு அறிகுறிகளை கொடுக்கலாம் .
வலிப்புத்தாக்கங்கள் வந்தால் என்ன செய்யவேண்டும் ?
● பாதிக்கப்பட்டவர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ள, முதலில் அவர்களுக்கு அருகில் இருக்கும் பொருட்களினால் காயமடையாமல் இருக்க அவற்றை மாற்றிவிட வேண்டும்.
● கழுத்தை சுற்றி இறுக்கமான உடை அணிந்து இருந்தால் அதை தளர்த்தி விட்டு, நன்றாக மூச்சு விட உதவ வேண்டும்.
● தலைக்கு அடியில் மென்மையான தலையணை அல்லது மடித்த போர்வை அல்லது துணியை வைக்க வேண்டும். அவரது வாயில் நுரை தள்ளி, மூச்சு விட சிரமப்பட்டால், மெல்ல உடலை பக்கவாட்டில் திருப்பி விட வேண்டும். அவ்வாறு செய்தால் எச்சில் கீழாக வழிந்து விடும்.
● பாதிக்கப்பட்டவரின் அருகே கூட்டமாக ஆட்கள் நிற்கக்கூடாது.
● வலிப்பு தானாக நிற்கும் வரை காத்திருங்கள். தானாக நிற்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.
வலிப்புத்தாக்கங்கள் சிகிச்சை முறைகள்:
CBC, MRI scan, CT scan, electroencephalopathy (EEG), cranium X-ray ஆகியவற்றின் முடிவுகளைக் கொண்டு மருத்துவர் நோயின் பாதிப்பு தன்மைக்கேற்ப சிகிச்சை அளிப்பர்.
● மருத்துவ சிகிச்சை: Anti-epileptic Medicine நோய் வருவதை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் உதவும். ஆனால் மாத்திரை மற்றும் மாத்திரை அளவு ஒவ்வொரு நோயாளிகளுக்கும் மாறுபடும். எனவே சரியான மருந்தை கண்டுபிடிப்பதற்கு சிறிது கடினமாகும் .
● அறுவை சிகிச்சை: வலிப்பு உண்டாக்கும் காரணங்களை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை உதவும்.
வலிப்பு வருவதை எவ்வாறு தடுக்கலாம்:
● மது அருந்துதலை தவிர்க்கவும்
● வழக்கமாக தூக்கம் முறையை பின்பற்றவும்
● உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் கவனித்து சரிப்படுத்த வேண்டும்.
● உடல் தொடர்பான மற்ற நோய்களுக்கு சிகிச்சையை சரியாக பின்பற்ற வேண்டும்.