முகவாதம் என்றால் என்ன? அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை

முகவாதம் என்றால் என்ன?
நம் உடலில் மூளை நரம்புகள் என்ற வகையில் 12 நரம்புகள் உள்ளன, அதில் 7 ஆவதாக இருக்கும் நரம்பு தான் முக நரம்பு எனப்படும். இது மூளையில் இருந்து காது வழியாக நீடித்து முகத்தின் தசைகளை செயல்படுத்த உதவும். இந்த நரம்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது முகத்தின் ஒரு பக்கத்தில் உள்ள முக தசைகளை பலவீனமாக்கி செயல் இழக்க வைக்கும். இதை முகவாதம் என்பார்கள்.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,00,000 பேரில் 20-30 பேர் இந்த முகவாதம் பிரச்சினையினால் பாதிக்கப்படுகிறார்கள்.
யாருக்கு முகவாதம் வரலாம் ?
இது 15-45 வயதை உடையவர்களுக்கு வரலாம், குடும்பத்தில் வேறு ஒருவருக்கு முகவாதம் இருந்தாலும் இந்த பிரச்சனை வரக்கூடும்.
முகவாதம் வருவதற்கான காரணங்கள்:
- வைரஸ் தொற்று- இதில் முக்கியமாக ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமி 1 (Herpes simplex 1 or HSV-1) , இந்த வைரஸ் நரம்புகளில் தொற்றை உண்டாக்கி அங்கு இருக்கும் ரத்த ஓட்டத்தை பாதித்து வீக்கத்தை (swelling) ஏற்படுத்தும். அப்போது நரம்பின் செயல்பாடு நின்று முகவாதம் வரக்கூடும் .
- நோய் எதிர்ப்பு சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள்
மேலும் , இந்த முகவாதம் வருவதற்கான முக்கியமான காரணங்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை.
முகவாதம் அறிகுறிகள்:
- கண்களை மூட முடியாமல் போவது.
- பேசுவதில் சிரமம் ஏற்படுவது.
- முகத்தின் சமநிலை பாதிக்கப்படும், ஒரு பக்கம் கோணியபடி காட்சியளிக்கும்.
- புருவங்களை அசைக்க முடியாது.
- வாய் கீழே தொங்குவது.
- காது கேட்காமல் போவது.
- உணவு உண்பதில் சிரமம் ஏற்படுவது.
- குரலில் கரகரப்பு வருவது.
- கண்களில் தொடர்ந்து நீர் வடியும்.
- கழுத்து, கண்ணம் மற்றும் பல் இருக்கும் இடங்களில் கடுமையாக வலி வரக்கூடும்.
முகத்தின் அடிப்படை செயல்கள் இழப்பதினால் கடுமையான வலியுடன், முகம் உணர்ச்சி இல்லாததுபோல் காட்சி அளிக்கக்கூடும். இதனால் சமூகத்தில் பிறருடன் சாதாரணமான தொடர்பு வைத்துக்கொள்வதே சிரமாகும்.
எனவே இது முகவாதம் உள்ள நோயாளிகள் இடையே பெரும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கக்கூடும் மற்றும் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.
மருத்துவரின் ஆலோசனை:
இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் காலம்தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. உலகில் முகவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் மூன்று வாரங்களில் குணம் அடைகிறார்கள். எனவே முகவாதம் வந்தவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
பரிசோதனை:
CBC, MRI, Electro Diagnostic டெஸ்ட் மற்றும் சில பரிசோதனைகளின் மூலம் முகவாதம் மற்றும் அதன் பாதிப்பின் தன்மையை கண்டறியலாம்.
முகவாதம் சிகிச்சை:
Drug remedy (corticosteroids remedy and antiviral drug remedy), 70% பேர் இதன் மூலம் குணம் அடைகிறார்கள்.
- Electrical Stimulation மூலம் முகவாதம் சீக்கிரம் குணமடைய உதவும்.
- Facial Excercise
- அறுவை சிகிச்சை மூலமாக கூட முகவாதம் இந்த காலத்தில் சரி செய்யலாம்.
சிகிச்சை எடுப்பதில் அலட்சியம் காட்டினால் ஒரு பக்கத்தில் மட்டும் வரும் இந்த முக வாதம் இன்னொரு முக பாகத்திற்கும் பரவிவிடும்.
முகவாதம் இருப்பவர்கள் நல்ல எண்ணங்களுடன், தைரியமாக, அச்சமின்றி மருத்துவர் ஆலோசனை பின்பற்றினால் சீக்கிரமாக குணமடையலாம் .