முக்கிளை நரம்புவலி என்றால் என்ன?- ட்ரைஜீமினல் நரம்பு வலி Trigeminal Neuralgia in Tamil
முக்கிளை நரம்புவலி என்றால் என்ன?- ட்ரைஜீமினல் நரம்பு வலி Trigeminal Neuralgia in Tamil
தலையில் உள்ள 12 மூளை நரம்புகளில் ஐந்தாவதாக இருப்பது தான் ட்ரிஜெர்மினல் நரம்பு அல்லது முக்கிளை நரம்பு. இந்த நரம்பு 3 கிளைகளாக பிரிந்து உட்சந்தலை முதல் தொண்டை வரை இருக்கும் எல்லா பகுதிகளையும் சீராக செயல்பட உதவும். இந்த முக்கிளை நரம்பில் பிரச்சினை ஏற்பட்டால் அது ட்ரிஜெர்மினல் நரம்பு வலியை உண்டாக்கும் .
ஏன் இதை தற்கொலை நோய் என்று அழைக்கிறார்கள் ?
ட்ரிஜெர்மினல் / முக்கிளை நரம்பின் கிளைகள், விரிவடைந்து செயல்பட செய்யும் எல்லா பகுதிகளிலும் மிகவும் கடுமையான மின்சாரம் தாக்கியதுபோல் வலியை உண்டாக்கும். இதில் பாதிக்கப்படும் நோயாளிகள் மனநிலை தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் எனவே காலப்போக்கில் அது தற்கொலையில் முடியலாம்.
யாருக்கு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வரலாம் ?
இந்தியாவில் 1,00,000 பேரில் வெறும் 4-5 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வரலாம்.
- பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் 60% அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வருவதற்கான காரணங்கள் என்ன?
- ட்ரிஜெர்மினல் நரம்பைச்சுற்றி இருக்கும் ரத்த தளத்தில் சில சமயம் விரிவாக்கம் அடைந்தாலோ அல்லது அதில் கொழுப்பு படிவு அடைந்தாலோ அங்கு ட்ரிஜெர்மினல் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு ட்ரிஜெர்மினல் நரம்பு வலி வரக்கூடும்.
- நரம்பின் பக்கம் வளரும் கட்டிகள் , நரம்பின் கிளையினுள் அழுத்தத்தை உண்டாக்கினாலும் இந்த நிலை உருவாகலாம்.
ட்ரிஜெர்மினல் நரம்புவலியின் அறிகுறி என்ன?
- திடீரென சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்கு ஊசி குத்துவது மற்றும் சுடுவதுபோல் வலி ஏற்படும்.
- இந்த வலி ஒரு நாள் அல்லது வாரத்திற்கு பலமுறை வரலாம்.
- பெரும்பாலும் முகத்தின் ஒரு பக்கம் மட்டும் பாதிக்கக்கூடும்.
- பேசும்போது, முகம் கழுவும்போது, உணவு உண்ணும்போது, முகம் தொடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பல் விலகும்போது, சிரிக்கும்போது அல்லது வேகமாக காற்று முகத்தில் வீசும்போதும் இது போல பல தினசரி செயல்களை செய்யும்போது கடுமையான வலி ஏற்படும்.
மருத்துவரின் ஆலோசனை
இது 75-80% குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். குணப்படுத்த பல வாரங்கள் அல்லது சில மாசங்கள் ஆகலாம்.நேரம் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனைபெறுவது சிறந்தது.
நரம்பு மற்றும் உடல் பரிசோதனை, CBC,MRI scan மற்றும் சில பரிசோதனைகளின் மூலம் காரணகங்களை கண்டறிந்து மருத்துவர் நோயின் பாதிப்பு நிலைமையை அறிந்து, அதற்கேற்ப சிகிட்சையை வழங்குவார்.
ட்ரிஜெர்மினல் நரம்பு வலி சிகிச்சை:
- மருத்துவ சிகிச்சை (anticonvulsant medicine, Muscle relaxants)
- அறுவை சிகிட்சை (Gamma knife radio surgical procedure, Micro vascular decompression)